சிறைகளில் மத ரீதியான சலுகைகள் வழங்குவது ஆபத்து... இந்து முன்னணி கண்டனம்!
தமிழக சிறைகளில் மத ரீதியான சலுகைகள் வழங்குவது மிகவும் ஆபத்தானது என்று இந்து முன்னணி கண்டனம்.
தமிழக சிறைகளில் தற்பொழுது மதரீதியான சலுகைகள் வழங்குவது ஆபத்தானது என்று இந்து முன்னணி சார்பில் கண்டனம் ஒன்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் வெளியிட்ட செய்து குறிப்பில் இது பற்றி கூறப்பட்டிருக்கிறது. குறிப்பாக கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் தண்டனையை அனுபவித்து சிறையில் உள்ள தண்டனை கைதிகளுக்கு செல்போன் வெளியில் உள்ள நபர்களிடம் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அல் உம்மா சிறை கைதிகளுடன் சட்டவிரதமாக செல்போனில் பேசியவர்களை காவல்துறை எச்சரிக்கை மட்டுமே செய்து அனுப்பி இருக்கிறது. தற்போது வினோதமாகவே இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சிறைக்கு வெளியே நடைபெறும் பல்வேறு பயங்கரவாத செயல்களுக்கு கூட சிறையில் உள்ள தண்டனை கைதிகள் பெரும் மூளையாக பின்னணியில் செயல்பட்டு வருகிறார்கள். பல குற்ற செயல்களில் கண்டறியப்பட்டு இருப்பது, தமிழக முழுவதும் உள்ள சிறகைகளில் அல் உம்மா பயங்கரவாதிகளில் மிகவும் கடுமையாக கண்காணிக்கப்பட வேண்டும்.
பயங்கரவாதிகளுக்கு சிறைக்குள் செல்போன் எங்கிருந்து வந்தது? யார் இதை கொண்டு வந்தார்கள்? என்பதை தீவிரமாக விசாரித்து அதை தடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக தமிழக சிறைகளில் மத ரீதியான சலுகைகள் வழங்குவது மிகவும் ஆபத்தானது என்றும், தமிழக அரசு இதை உணர்ந்து கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து முன்னணி சார்பில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: Asianet News