முதல் நாளே இடிக்கப்பட்ட பள்ளி.. சாலையில் மாணவ, மாணவிகள்.. இந்து முன்னனி கண்டனம்!

பள்ளி இடிக்கப்பட்டதால் சாலையில் நின்று போராடும் மாணவ மாணவிகள், தமிழக அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்.

Update: 2023-06-15 05:34 GMT

முன்னறிவிப்பு எதுவும் இன்றி பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டதால் மாணவ மாணவிகள் சாலையில் நின்று போராட்டம் என இந்து முன்னணி தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்து இருக்கிறது. திருச்சி மாவட்டம் நாகமங்கம் பகுதியில் உள்ள புனித சூசையப்பர் பள்ளி இடிக்கப்பட்டதால் மாணவ மாணவிகள் சாலையில் பெற்றோருடன் போராட்டம் செய்த செய்தி பரபரபரப்புக்கு உள்ளாகியுள்ளது. இதற்கு விளக்கமளித்த மாவட்ட நிர்வாகம் நீர் நிலைகளை ஆக்ரமித்து இந்தப்பள்ளி கட்டப்பட்டுள்ளதால் மதுரை கிளை உயர் நீதீமன்ற தீர்ப்பையொட்டி இடிக்கப்படுகிறது என்று கூறுகிறது.


முறையான முன் அறிவிப்பு இல்லாமல், பள்ளி நிர்வாகத்தையும் கலந்து பேசாமல் பள்ளி திறந்த முதல்நாளே இடித்த சம்பவம் திமுக ஆட்சி தந்த வேதனையை காட்டுகிறது. நீதிமன்ற தீர்ப்பை அமுல் படுத்தி கடமை கண்ணியம் கட்டுப்பாடு என பள்ளியை இடித்த அரசு எத்தனையோ நீர் நிலைகளை ஆக்ரமித்து பள்ளிவாசல்கள், சர்ச்சுகள் கட்டப்பட்டுள்ளன. அவைகளை இடிக்க அரசாங்கம் முன்வருமா? என்று இந்து முன்னணியினர் கேள்வி எழுப்பு இருக்கிறார்கள்.


எத்தனையோ அரசாங்க நிலங்களை ஆக்ரமித்து, பெரியார் அண்ணா சிலைகள் நிறுவப்பட்டுள்ளதை இடிக்க உடன்படுமா? நீதிமன்ற தீர்ப்பு அனைவருக்கும் சமமே. ஆனால் அவசர கதியில் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல் பள்ளியை இடித்த செயல் கண்டனத்திற்குரியது. உடனடியாக மாணவர்கள் வேறுபள்ளியில் படிக்க அவசரகால நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் இந்து முன்னணி சார்பில் கோரிக்கையும் வைக்கப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy:  News

Tags:    

Similar News