விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வழங்க இந்து மத ஆர்வலர்களை அலைச்சலில் விடும் தி.மு.க அரசு - இந்து முன்னணி குற்றச்சாட்டு!
விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி வழங்குவதற்காக அலைக்கழிக்கப்படும் இந்து முன்னணி.
விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக அரசு மற்றும் காவல்துறை தங்களை அடுக்களித்து வருவதாகவும் இந்து முன்னணி கட்சி தலைவர் ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்திக்கு கட்டாயம் காவல்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும் பிறகு தான் விநாயகர் சிலையை நிறுவுவது மற்றும் ஊர்வலம் செய்வது போன்ற பலவற்றையும் நாம் செய்ய முடியும். அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான அனுமதி பெறுவதற்காக தற்போது இந்து மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி என்பது ஒரு மத விழா. இதில் அரசு தலையிடுவது மிகவும் கண்டனத்திற்குரியது என்றும் நெல்லையில் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் அவர்கள் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். இந்து முன்னணி சார்பில் நெல்லை கோட்ட பகுதிகளில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு நெல்லை கொக்கிரங்குளம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தன்னுடைய கருத்தை தற்போது பதிவு செய்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறுகையில், "இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் இந்து முன்னணி சார்பில் பிரிவினை வாதத்தை முறியடிப்போம் தேசிய சிந்தனையை வளர்ப்போம் என்று தலைப்பில் கொண்டாடப்படும். தமிழக முழுவதும் ஒன்றை லட்சத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தி தங்கள் முறைப்படி கொண்டாடுவதற்கு உரிமை உள்ளது. ஆனால் சட்டத்தின் கைப் பிடிக்குள் இந்து மதத்தை வைத்து தான் நடக்க வேண்டும் என்பது மிகவும் கண்டனத்திற்குரியது" என்று அவர் தன்னுடைய கருத்தை கூறுகிறார்.
Input & Image courtesy: News