ஈரோடு காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக ஆயுதப் பயிற்சியா.. கொதித்தெழுந்த இந்து முன்னணி!

ஈரோடு காட்டுப்பகுதியில் ஆயுத பயிற்சி நடைபெறும் வரை காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது என இந்து முன்னணி கேள்வி.

Update: 2023-06-08 04:38 GMT

கோவையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 23-ஆம் தேதி  தீபாவளி தினத்தை மறக்க முடியாத நாளாக மாற்ற பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் திட்டம் போட்டது. இதன் காரணமாக கோவையில் கோவில் அருகே குண்டு வெடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் வைத்தவருக்கே இந்த குண்டு வெடிப்பு பாதிப்பு திருப்பி அமைந்தது. கடந்த 2022 அக்டோபர் 23- ம் தேதி கோவையில் நடந்த கார்குண்டு வெடிப்பில் முபின்அலி என்பவர் இறந்தார். மிகப்பெரிய தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிடப்பட்டது என்பது விசாரணையில் இருந்து தெரிய வந்தது.இதை மத்திய N.I.A அதிகாரிகள் புலனாய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து அவர்கள் நடத்திய விசாரணையில் பயங்கரவாதிகள் சிலர் கைது செய்யப்பட்டனர்.


தற்போதைய புலனாய்வில் பயங்கரவாதிகள் ஈரோடு சத்தியமங்கலம் காட்டு பகுதியில் ஆயுதபயிற்சி எடுத்துள்ளனர் என்ற அதிர்ச்சி செய்தி கிடைத்துள்ளது. தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஆயுதபயிற்சியில் ஈடுபட்ட சம்பவம் தமிழக எல்லா பயங்கரவாத செயல்களையும் N.I.A கண்டுபிடிப்பதாக இருந்தால் தமிழக காவல்துறை எதற்கு என்ற கேள்வி எழுகிறது. இனிமேலாவது தமிழகத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உளவுத்துறை விழிப்போடு செயல்பட வேண்டுமென இந்துமுன்னணி கேட்டுக் கொள்கிறது.


இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் தமிழர்கள் தமிழ்நாட்டில் பாதுகாப்பை உணர வேண்டிய வகையில் தமிழக காவல்துறை செயல்பட வேண்டும் என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை ஒன்றை விடுத்து இருக்கிறது. தமிழகத்தில் நடைபெறும் இத்தகைய பயங்கரவாத சம்பவங்கள் காவல்துறைக்கோ உளவுத்துறைக்கோ தெரியாமல் போனது ஏன் ? அந்த நிலையில் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதா? உளவுத்துறையும் காவல்துறையும் வனத்துறையும் உறங்கிக் கொண்டிருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. பொதுமக்களின் பாதுகாப்பு முக்கியம் என்று கூறப்பட்டு உள்ளது.

Input & Image courtesy: Twitter

Tags:    

Similar News