பாட திட்டத்தில் கருணாநிதி வரலாறு.. லியோனி தகவல்.. ஆட்சேபணை தெரிவித்த இந்து முன்னணி!
அடுத்த ஆண்டு பாட புத்தகத்தில் கருணாநிதி வரலாறு சேர்க்கப்படும் என்று தகவல்.
தமிழகத்தில் பள்ளிகள் விரைவாக திறக்கப்பட இருக்கிறது. பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே பாடப்புத்தகங்களை விநியோகிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்து இருப்பதால் அதனுடைய பணிகள் தற்போது விரைவாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பாக புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்டது என்று அதன் தலைவர் லியோனி ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார்.
திண்டுக்கல் மண்டல அலுவலகத்தை தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் லியோனி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி உடன் ஆய்வு செய்து புத்தகங்கள் முழுமையாக விநியோகிக்கப்படுவது உறுதி செய்தார்கள். தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பாக 3 கோடியே 56 லட்சம் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்டது. இந்த ஒரு பணிகளுக்கு பிறகு லியோனி அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் உரையாற்றினார்.
அப்பொழுது அவர் கூறுகையில், அடுத்த ஆண்டு பாட புத்தகத்தில் கருணாநிதி வரலாறு சேர்க்கப்படும் என்று லியோனி தற்போது சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்றே பகிர்ந்து இருக்கிறார். இந்த ஒரு செய்திக்கு இந்து முன்னணி சார்பில் ஆட்சேபணை தெரிவித்து இருக்கிறது. தலைவர் பின்பற்றிய மாட்டிக்கொள்ளாமல் சுருட்டுவது எப்படி எனும் அரிய வரலாறு இடம் பெறுமா..? என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறது.
Input & Image courtesy: Twitter