கள்ளச் சாராயம் கூட காய்ச்சலாம்.. ஆனா கோவிலை புதுப்பித்த வழக்கா.. இந்து முன்னணி குற்றச்சாட்டு...
தமிழகத்தில் பராமரிக்கப்பட வேண்டிய கோயில்களை பக்தர்கள் புதுப்பித்தால் வழக்கு பதிவு.
தமிழகத்தில் பராமரிக்கப்பட வேண்டிய கோவில்கள் ஏராளமாக இருக்கிறது. குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறை கோவில்களின் வருமானத்தில் மட்டும்தான் குறியாக இருக்கிறது. ஆனால் கோவில்களின் பராமரிப்புகளை பற்றி அவர்கள் கொண்டு கொள்வது கிடையாது. சமீபத்தில் பராமரிக்கப்பட வேண்டிய கோவில்கள் பக்தர்களை களத்தில் இறங்கி வேலை செய்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை இன்னும் முன்னணியினர் முன்வைத்து இருக்கிறார்கள். கோவில் பணி செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது எந்த வகையில் நியாயம் என்று இந்து முன்னணியினர் கேள்வியும் எழுப்பி இருக்கிறார்கள்.
பண்ருட்டியில் நடந்த அவலம் என்று தன்னுடைய ஆதங்கத்தை அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். குறிப்பாக பண்டிருட்டியை அடுத்த திருத்துறையூர் கிராமத்தில் உள்ள பழமையான பிடாரி அம்மன் கோவிலை ஊர் பொதுமக்கள் புதுப்பிக்கும் பணியை ஆரம்பித்தனர். கோவில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் கோவில் நிர்வாக அதிகாரி பணியை தடுத்து நிறுத்தி போலிசில் புகார் செய்துள்ளார்.இதன் பேரில் கோவில் பணியை ஊர் மக்களோடு செய்ய முயன்ற ஊராட்சி தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அறநிலையத் துறையும் கோவிலை புனரமைக்க தயாரில்லை. பக்தர்கள் புனரமைத்தாலும் விடுவதில்லை. கோவில் பணி செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது எந்த வகையில் நியாயம் என இருநூறுக்கும் மேற்பட்டோர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோசங்கள் எழுப்பினர். குற்றச் செயல் செய்பவர்களை விட்டு விட்டு கோவில் பணி செய்பவர்கள் மீது வழக்குப் போடும் தி.மு.க அரசின் நிலைப்பாடு சந்தி சிரிக்கிறது என்று இந்து முன்னணியினர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார்கள்.
Input & Image courtesy: News