கோவில் திருவிழா குறித்து போலீஸ் அனுமதி தேவையில்லை - நீதிமன்றம் உத்தரவு!
கோவில் திருவிழா குறித்து போலீஸ் அனுமதி இனி தேவையில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது விருதுநகரில் அடுத்து உள்ள வளைகாப்பு கிராமம் அரிசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த வருடத்திற்கான திருவிழா அனுமதி குறித்து அந்த கோவில் நிர்வாகம் போலீசாரிடம் விண்ணப்பித்து உள்ளார்கள். இதுகுறித்து போலீஸார் தரப்பில் எந்த தகவலும் தரப்படவில்லை. இதனால் கோவில் திருவிழா தாமதம் ஏற்பட்டது. நீண்ட நாள் ஆகியும் போலீஸ் தரப்பிலிருந்து எந்த ஒரு அறிவிப்பும் அளிக்கப்படாததால் இதுகுறித்து பொதுமக்கள் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கின் மீதான தீர்ப்பு தான் தற்போது வெளியாகி உள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இந்த வழக்கை விசாரணை செய்தது நீதிபதி சுவாமிநாதன் அவர்கள் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வருகையில், திருவிழா நடத்த அனுமதி போலீஸ் தரப்பில் பெற வேண்டிய அவசியம் இனி கிடையாது என்று உத்தரவிட்டுள்ளார். கோவில் திருவிழாக்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருந்தால் அல்லது ஸ்பீக்கர்கள், ஆடல் பாடல் நிகழ்ச்சி வைப்பதாக இருந்தால் மட்டுமே போலீஸ் அனுமதி தேவை.
மற்றபடி சின்ன சின்ன ஊர் திருவிழாக்கள் அதுபோல தளபதி இது தேவை கிடையாது. ஊர் பொதுமக்கள் சார்பில் தங்களுடைய கோவிலுக்கு திருவிழாக்களை அவர்கள் ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்று நீதி மன்றம் சார்பில் தற்போது கூறப்பட்டுள்ளது. ஊர் திருவிழாவின் போது சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும் பொதுமக்கள் நினைவிற் கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
Input & Image courtesy: Oneindia News