நாகை கோவிலின் திருடப்பட்ட 11 சிலைகள்: 50 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!
நாகை பண்ணாரி அம்மன் கோவில் திருடப்பட்ட 11 சிலைகள் 50 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் கண்டுபிடிப்பு.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள மிகவும் பழமையான கோவில்தான் பண்ணாரி பரமேஸ்வரி அம்மன் கோவில். இந்து கோவிலில் அமைந்துள்ள சிலைகள் தான் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டது. இது சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகிகள் ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார்கள். இதில் திருடப்பட்ட மொத்த சிலைகள் எண்ணிக்கை பதினொன்றாக இருக்கும் என்று போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிலையை திருடியது யார்? எங்கு கொண்டு சென்றார்கள்? என்பது தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை.
பாண்டிச்சேரி ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று அமெரிக்காவில் உள்ள மியூசியத்தில் பழமையான பொருட்கள் காண சிலைகள் கண்காட்சியில் எடுத்த போட்டோவின் மூலம் தான் இந்த சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களில் இரண்டு வெண்கல சிலைகள் திருடப்பட்ட கோவிலில் இருந்து எடுக்கப்பட்டது என்பது போல போலீஸ் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்கள் தற்போது சுவாமி சிலைகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
இந்த சிலைகள் அமெரிக்காவில் இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு அமெரிக்காவில் நியூயார்க் மற்றும் கலிபோர்னியா நகரங்களில் உள்ள பழம் பெரும் மியூசியங்களில் தான் தற்போது நம்முடைய சுவாமி சிலைகள் குறிப்பாக வெண்கல சிலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவற்றை விட்டு தமிழகத்திற்கு கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
Input & Image courtesy: Polimer News