நெற்றியில் வைத்த திருநீரால் இந்து மாணவிக்கு நேர்ந்த அவமானம்! பள்ளியின் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் செய்த காரியம் என்ன?

Update: 2022-01-07 13:16 GMT

தென்காசி அருகே பள்ளிக்குச் செல்லும்  இந்து மாணவி தன் நெற்றியில்  திருநீரு இடுவதை,  அப்பள்ளி ஆசிரியர்  ஒருவர்  தடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமீபகாலமாக தமிழகத்தில் இந்து மக்கள், தாங்கள் கொண்ட மதத்தின் அடையாளங்களை ஏந்திக்கொள்வதால்  பல  எதிர்ப்புகளை சம்பாதித்து வருகின்றனர். கல்வி நிலையங்களில்  இந்து அல்லாத பிற மத அடையாளங்கள்   வழு கட்டாயமாக மாணவர்களிடம் திணிக்கப்படுகிறது  என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது தென்காசியில் நடந்த சம்பவம்  இக்குற்றச்சாட்டுக்கு மேலும்  வழு சேர்க்கிறது.


தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில், இந்து  மாணவி ஒருவர்  தினந்தோறும் தன் நெற்றியில் திருநீரு வைத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றுள்ளார். இதனைப் பார்த்துப்  பொறுத்துக் கொள்ளாத அப்பள்ளி ஆசிரியர் ஒருவர், அம்மாணவி திருநீரு வைத்துக் கொள்வதை தடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. உடனே அம்மாணவி தன் பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த சம்பவத்தை எடுத்துக் கூறியுள்ளார். பின்னர் மாணவியின் பெற்றோரும், அப்பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இது குறித்து முறையிட்டுள்ளனர். 


அதற்க்கு பள்ளியின்  தலைமை ஆசிரியரோ, மாணவியின் புகைப்படத்தை  தவறாக சித்தரித்து, பெற்றோரிடம் அதை வைத்து  மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இச்செய்தியை அறிந்த இந்து அன்னையர் முன்னணி களத்தில் குதித்தது. இந்த சம்பவத்தை எதிர்த்து ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை சுரண்டை பகுதியில் நடத்தியது. இதுகுறித்து இந்து முன்னணி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :

தென்காசி மாவட்டம் சுரண்டை இந்து அன்னையர் முன்னணி கண்டனம்.இந்து மாணவி திருநீர் வைத்துக்கொண்டு பள்ளி செல்வதை தடுத்த ஆசிரியரையும் இதை தட்டி கேட்ட மாணவியின் புகைப்படத்தை தப்பாக சுத்திகரித்து மிரட்டிய தலைமை ஆசிரியரை கண்டித்தும் இந்துமுன்னணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.


Tags:    

Similar News