விநாயகர் கோயில் தீர்த்த குளத்தில் மது அருந்தி அவமதித்தவர்களை, கைது செய்யக் கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் !
ஈரோடு மாவட்டத்தில், விநாயகர் கோயில் தீர்த்த குளத்தை, அவமதித்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்.
ஈரோடு மாவட்டத்தில், மத்தள கொம்பு விநாயகர் கோயிலில் புனித தீர்த்த குளம் இருந்து வருகிறது . அத் தீர்த்த குளத்தில் ஒரு சில இளைஞர்கள் மது அருந்தி குளித்து விளையாடுவது போன்ற ஒரு காணொளி சமூக வலைத்தளத்தில் பரவலாக பரவியது. இச் சம்பவம் இந்து மத உணர்வாளர்களை காயப்படுத்தியதை தொடர்ந்து, அச் சம்பவத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பல தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், அத் தீர்த்த குளத்தை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி சார்பில் நேற்று ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இது குறித்து இந்து முன்னணி வெளியிட்ட அறிவிப்பில் :
மத்தள கொம்பு விநாயகர் கோயில் தீர்த்த குளத்தை அவமதித்த மத வெறியர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறித்தி இந்து முன்னணி நடத்திய "மாபெரும் ஆர்ப்பாட்டம்" மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் cp சண்முகம் ஜி கண்டன உரை ஆற்றினார். காவிப்படை மறவர்கள் திரண்டனர். கிராம மக்களும் திரண்டு வந்து ஆதரவு.
சமீப காலமாக இந்து மத அடையாளங்களை அவமதிக்கும் சம்பவங்கள் அரேங்கேறிவருவதும், அது எதிர்த்து இந்து முன்னணி அமைப்பு போராட்டம் நடத்துவதும் வழக்கமாகி வருகிறது.