இந்துக்களை கோவிலுக்கு அனுமதிக்காத கட்டுப்பாடுகளை, விமர்சிக்கும் இந்து முன்னணி தலைவர்!
"ஆங்கில புத்தாண்டு முடியும்வரை இந்த அரசு காத்திருந்து, ஜனவரி 6 அன்று கட்டுப்பாடுகளை விதிக்கின்றது.": என்று தி.மு.க அரசின் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரர் சுப்பிரமணியம் தன் அறிக்கையில் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக அரசு விதித்த வெள்ளி,சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் கோவில்கள் மூடப்படும் என்ற அறிவிப்பு தமிழக இந்துக்கள் மத்தியில் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
வேலைகள் மற்றும் தொழில்களில் மூழ்கியிருக்கும் பக்தி உணர்வுள்ளவர், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்துவது வழக்கமாக இருக்கையில், முந்தைய பெருந்தொற்று அலையில் விதிக்கப்பட்ட இந்த உத்தரவு(வெள்ளி,சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் கோவில்கள் மூடப்படும்), இப்பொழுதும் விதிக்கப்பட்டதால் இந்துமத உணர்வாளர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
"முழு கட்டுப்பாடுகளுடன் கோவில்களுக்கு மக்களை அனுமதிக்க வேண்டும்" என்ற கோரிக்கை சமூகவலைதளங்களில் பலரால் எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்து முன்னணி மாநில தலைவர் திருப்பூர் காடேஸ்வரா சுப்பிரமணியம் இது குறித்து ஜனவரி 7 அன்று வெளியிட்ட அறிக்கையில்:
கொரோனா பரவி வருவதை காரணம் காட்டி தமிழக அரசு வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் கோவிலை திறக்க தடை விதித்துள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல் என்று காரணம் சொல்கின்றது. ஆனால் மத்திய அரசு கடந்த 27.12.2021 அன்று சுற்றறிக்கை அனுப்பி கட்டுப்பாடுகளை விதிக்குமாறு அறிவுறுத்தியது. ஆங்கிலப் புத்தாண்டு முடியும்வரை இந்த அரசு காத்திருந்து நேற்று கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. குறிப்பாக இந்துக்கள் கொண்டாடும் போகிப் பொங்கல், காணும் பொங்கல், மாட்டு பொங்கல் நிகழ்ச்சிகள் வெள்ளி, சனி ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றது.