சிறையில் இருக்கும் ABVP மாணவ தலைவர்களை சந்திக்க சென்ற இந்து முன்னணி பொறுப்பாளர்ளுக்கு அனுமதி மறுப்பு!

Update: 2022-02-16 13:32 GMT

புழல் சிறைச்சாலை வாயிலில் ABVP மாணவ  தலைவர்களை சந்திக்க சென்ற இந்து முன்னணி பொறுப்பாளர்ளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  


நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின் வீடு முன்பு " கட்டாய மத மாற்றத்தால் தற்கொலை செய்துகொண்ட தஞ்சை மாணவியின் இறப்புக்கு  நீதி வேண்டியும், சி.பி.ஐ விசாரணைக்கு தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும்" என்ற கோரிக்கைகளுடன்  ABVP அமைப்பினர் முற்றுகையிட்டனர்.


பின்னர் முற்றுகையில் ஈடுபட்ட  ஏ.பி.வி.பி மாணவ அமைப்பு தேசிய பொதுச் செயலாளரான நிதின் திருப்பாதி உள்ளிட்டோரை தமிழக காவல்துறை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தி சிறையில் வைத்தனர். தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, இந்தியா முழுவதும் போராட்டம் வெடிக்க தொடங்கி இருக்கிறது.


இப்படி இருக்க இந்து முன்னணி அமைப்பின் பொறுப்பாளர்கள், ABVP மாணவ தலைவர்களை சந்திக்க புழல் சிறைக்கு சென்றபோது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  


தஞ்சை மாணவியின் தற்கொலை வழக்கை சி.பி.ஐ நேற்று முதல், தன் விசாரணையை தொடங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News