நீலகிரி: பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் மதமாற்ற பிரச்சாரம்! களத்தில் இறங்கிய இந்து முன்னணி!

Update: 2022-02-07 07:53 GMT

நீலகிரி மாவட்டத்தில், பழங்குடியினரை குறிவைத்து, சட்டவிரோத  மதமாற்றம் செய்ய முயற்சித்தவர்கள்  மீது, நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து முன்னணியினர் காவல்துறையில் புகார் மனு அளித்துள்ளனர்.


தென்னிந்தியாவில் அணைத்து மாநிலங்களிலும், இந்து மக்களைக் குறிவைத்து சட்டவிரோத கட்டாய மதமாற்ற செயல் அரங்கேறி வருகிறது. குறிப்பாக பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பழங்குடியின இனத்தவர்களை  குறிவைத்து, கட்டாய சட்டவிரோத மதமாற்ற கும்பல் பல ஆண்டுகளாக மதமாற்ற செயலில் ஈடுபட்டு வருகிறது என்பதை  அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் மட்டும் வசிக்கும் "வீரகம்பை" என்னும் பகுதியில், அம் மக்களை சட்டவிரோத மதமாற்றக்  கும்பல், மதமாற்றம் செய்ய முயற்சித்ததாக  கூறப்படுகிறது. பின்பு இந்து முன்னணி அமைப்பு சம்பவ இடத்திற்கு விரைந்து மதமாற்றம் செய்தவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் குறித்து காவல்துறையில் புகார் மனுவும் அளித்தனர்.

இந்து முன்னணியின் இந்த உதவியின் மூலம். அவ்வமைப்பின் மேன்மையை உணர்ந்த அக்கிராம வாசிகள், 20 குடும்பங்களுடன் இந்து முன்னணியில் இணைந்தனர். 

Tags:    

Similar News