காளியம்மன் கோவில் அருகில், சட்ட விரோத ஜெபக்கூடம் கட்ட முயற்சி!

Update: 2022-02-10 09:41 GMT

தஞ்சை மாவட்டத்தில், காளியம்மன் கோவில் அருகில் சட்ட விரோதமாக ஜெபக்கூடம் எழுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது.


பொது இடங்களில், பொதுமக்கள் கூடும் பகுதியில், பொது மக்களை குறிப்பாக இந்து மக்களை குறிவைத்து, ஜெபக்கூடம் எழுப்பப்பட்டு வருவது வழக்கமாக இருக்கையில், தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக இந்து கோயில் அருகில் ஜெபக்கூடம் எழுப்பப்பட்டு வருவது, இந்துமத உணர்வாளர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில், மருத்துவ கல்லூரி சாலையில், காளியம்மன் கோயில் ஓன்று இருக்கிறது. அக்கோயிலில்  இந்து மக்கள் அன்றாடம் வழிபட்டு வருகின்றனர். இக்கோயிலுக்கு அருகில் சட்டவிரோதமாக ஜெபக்கூடம் எழுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது. புகாரை அறிந்த  இந்து முன்னணி அமைப்பு, அப்பகுதி காவல்துறையிடம் 'இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கக் கோரி'  மனு அளித்துள்ளது.

தமிழகத்தில் பல இடங்களில் சட்டவிரோத ஜெபக்கூடம் நிறுவப்பட்டு வருவதும், அதனை எதிர்த்து இந்து முன்னணி அமைப்பு காவல்துறையிடம் புகார் அளிப்பதும் வழக்கமாகி வருகிறது. 

Tags:    

Similar News