இஸ்லாமியரின் பீடி நிறுவனத்தின் பெயர் " முருகன் " ! பெயரை மாற்றவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் - எச்சரிக்கும் இந்து முன்னணி !

Update: 2021-10-28 10:53 GMT

இஸ்லாமியரின் பீடி தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் இந்து  கடவுளின் பெயரான  "முருகன்"  என  வைத்துள்ளது விழுப்புரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அன்னியூர் என்ற கிராமத்தில் "முருகன் பீடிகள்" என்ற பீடி தயாரிக்கும் நிறுவனம்   செயல்பட்டுவருகிறது. அந் நிறுவனத்தின்  உரிமையாளர் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. பீடி தயாரிக்கும் நிறுவனத்திற்கு கடவுள் "முருகன்" பெயரை வைப்பதா ?? என இந்து சமுதாய மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் பெயரை மாற்றவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணி அமைப்பு எச்சரித்துள்ளது. 

இதுகுறித்து  இந்துமுன்னணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:



இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் இஸ்லாமியர்கள் செயல்பாடு. பெயரை மாற்றவில்லை என்றால் போராட்டம் நடக்கும்.

என்று இந்து முன்னணி கூறியுள்ளது .

Hindu Munnani


 





Tags:    

Similar News