"புரட்டாசி சனிக்கிழமை கோயில் வழிபாட்டை அரசு தடை செய்துள்ளது கண்டனத்துக்குரியது ! " - உத்தரவை திரும்பபெற இந்து முன்னணி அறிக்கை !
இந்துக்களின் புனித நாளான புரட்டாசி சனி கிழமைகளில் கோயில்களில் வழிபட பக்தர்களுக்கு தடை விதித்த உத்தரவை திரும்ப பெற்று தி.மு.க அரசு உடனடியாக கோயில் வழிபாட்டிற்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் சி. சுப்பிரமணியம் தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் " தமிழக அரசு வெள்ளி சனி ஞாயிறு ஆகிய கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களை பக்தர்கள் வழிபட அனுமதி இல்லை என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று குறைந்து வருகிறது அரசு பள்ளிகள், சினிமா தியேட்டர்கள், மால்கள், சாராயக்கடைகள் (Wine Shop) என அனைத்திற்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.
ஆனால் கோயில்கள் வழிபாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பது நியாயமற்றது. குறிப்பாக இந்துக்களின் மிக முக்கியமாக விரதம் இருந்து பெருமாளை வணங்கும் புரட்டாசி சனிக்கிழமை மிகவும் புனிதமானது. இந்த சனிக்கிழமை இறைவழிபாட்டை அரசு தடை செய்துள்ளது கண்டனத்துக்குரியது. தமிழக அரசு உடனடியாக கோயில்களை திறந்து கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Image : Dreams Time.