அறநிலையத்துறை கோவில் சொத்துக்களை சுரண்டுவதா? உயர் நீதிமன்றம் கேள்வி?
அறநிலையத்துறை தன்னுடைய செலவுகளுக்காக கோவில் நிதியை பயன்படுத்த முடியாது நீதிமன்றம் கருத்து..
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் நிதியிலிருந்து கல்லூரிகள் தொடங்குவது குறித்த எதிர்ப்பும் , தற்பொழுது கோவில் நிதிகளை தவறாக பயன்படுத்துவதாக தடுக்க கோரி சென்னை நீதிமன்றத்தில் மயிலாப்பூரில் சேர்ந்த T. R. ரமேஷ் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை செய்த நீதிபதிகள் மனுதார மனுதாரர் தரப்பில் அறநிலையத்துறை ஆணையர் இணை ஆணையர் ஆய்வாளர்களுக்கான அலுவலக கட்டுமான பணிகள் மேற்கொள்ளவும் முந்தைய ஆட்சியில் அமைச்சர்களுக்கு சொகுசு கார் வாங்கவும் அறநிலையத் துறை கோவிலில் பஸ் நிலையங்களை விரிவாக்கம் செய்வதற்கானவும் மண்டபங்களை பக்தர்கள் தங்கும் விடுதிகள் கட்டவும், கோவில்கள் நிதி தாரளமாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்று அவர் தரப்பில் பாதிக்கப்பட்டது.
மேலும் கோவில்களில் நிர்வாகிக்கு நிர்வாகக் கட்டணமாக மொத்த வருமானத்தில் 12% வழங்கப்படும் நிலையில் கோவில்கள் நிதியை அறநிலையை துறைக்காக எந்த தயக்கமும் இன்றி அரசு நிதி போல செலவிடப்படுகிறது. இது தொடர்பாக சிறப்பு தணிக்கை செய்தால் அனைத்து உண்மையும் வெளிச்சத்திற்கு வரும் என்று மனுதாரர் தரப்பில் பாதுகாப்பு இருந்தது.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் அரங்கிலே துறைக்கு தேவையான செலவுகளை கோவில் நிதியிலிருந்து மேற்கொள்ள முடியாது. அறநிலையத் துறையின் செலவுகளுக்கு தொகுப்பு நிதியை தான் அவர்கள் பயன்படுத்த வேண்டும். கண்காணிப்பு என்ற பெயரில் கோவில் வளாகங்களை சுரண்ட முடியாது என்று நீதிபதிகள் கூறினார். பின்னர் விசாரணையில் பிப்ரவரி எட்டாம் தேதி இந்த வழக்கு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: Dinamalar