தமிழ்நாட்டின் சட்டவிரோத தகவல் தொலைத்தொடர்பு அமைப்பு: எங்கு கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா?

தமிழ்நாட்டின் சட்டவிரோத தொலைத் தகவல் தொடர்பு அமைப்பு கண்டு பிடிக்கப்பட்டது.

Update: 2023-02-17 03:19 GMT

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் சட்டவிரோத தொலைத் தகவல் தொடர்பு அமைப்பு செயல்படுவது பிப்ரவரி 15 அன்று கண்டு பிடிக்கப்பட்டது. தொலைத்தகவல் தொடர்புத்துறை சார்பில் தற்போது தமிழ்நாட்டில் உள்ள உரிமம் பெற்ற சேவைகள் அமைப்பு, பி.எஸ்.என்.எல் தமிழ்நாடு ஆகியவற்றால் அளிக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை, சேலம் மற்றும் மத்திய புலனாய்வு உள்ளிட்ட சட்ட அமலாக்க முகமைகள் சேலம் மாவட்டத்தில் உள்ள மெய்யனூர் மற்றும் கொண்டாலம்பட்டிப் பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான பகுதிகளில் கூட்டாக திடீர் சோதனை மேற்கொண்டன.


இங்கு சட்டவிரோதமான தொலைத்தகவல் தொடர்பு அமைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், சிம் கார்டு பெட்டிகள், சர்வதேச அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றுவதற்கு பயன்படுத்தப்படும் கம்பியில்லா இணையதளக் கருவி போன்றவை கண்டெடுக்கப்பட்டன. சர்வதேச அழைப்புகளை தேசிய அல்லது உள்ளூர் அழைப்புகளாக மாற்றுவது தேசப்பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்பதோடு தொலைத்தகவல் தொடர்பு சேவை வழங்குவோருக்கும் அரசு கருவூலத்திற்கும் இழப்பை ஏற்படுத்துவதும் ஆகும்.


இந்நிலையில், சேலத்தில், சட்டவிரோத தொலைத்தகவல் தொடர்பு அமைப்புகள் செயல்பட்ட இரண்டு இடங்களை கண்டறிந்தபோது அவற்றிலிருந்து 19 சிம் கேட்வேகளும், பயன்படுத்தப்பட்ட சுமார் 750 பிஎஸ்என்எல் சிம் கார்டுகளும், சிம் கார்டிலிருந்து வைஃபை ஹாட்ஸ்பாட்டுக்கு மாற்றுகின்ற 11 கருவிகளும், செல்பேசிகளும், இதர சில சாதனங்களும், தமிழ்நாடு காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

Input & Image courtesy: News

Tags:    

Similar News