பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை கண்டித்து அர்ஜுன் சம்பத் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் நடக்கும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை கலாச்சாரத்தை கண்டித்து இந்து மக்கள் கட்சி தலைவர் ஆர்ப்பாட்டம்.
தமிழகத்தில் தற்போது அமைதியை சீர் தொலைக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த தலைவர்களின் வீடு, வாகனங்கள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. கோவையில் தொடங்கியில் இந்த குண்டு வீச்சு சம்பவம் தற்பொழுது மதுரை, சென்னை, திண்டுக்கல் என பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக அருகில் வருகிறது. தொடர்ச்சியாக நடைபெற்ற வரும் இத்தகைய குண்டு வீச்சு சம்பவங்களை கவனித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று கோவையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் குறிப்பாக இந்துக்களை இழிவாக பேசிய ஆ ராசா மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசு தற்போது அதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் உயர்ந்துள்ள மின் கட்டணம் உயர்வை கண்டித்தும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த ஆர்ப்பாட்டம் நிகழ்ச்சியின் போது இந்து மக்கள் கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகிகள் ஆ.ராசாவின் புகைப்படத்தை எரிக்கும் வீடியோ மற்றும் தங்களுடைய காலணிகளால் புகைப்படத்தை அடித்து முழக்கத்தை வெளிப்படுத்தினார்கள்.
மேலும் இது பற்றி இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் இத்தகைய குண்டு வீச்சு சம்பவங்கள் குறித்து மத்திய அமைச்சரிடம் புகார்களை எழுப்பியுள்ளோம். மாநில அரசு தி.மு.க அரசு நிச்சயம் பதிலை கூற வேண்டும். தேவைப்பட்டால் தமிழகத்திற்கு இராணுவத்தை வரவழைக்க முயற்சி செய்வோம் என்று அவர் கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: Oneindia News