ஒரே இரவில் 7 கோயில்களில் கொள்ளை: போலீசார் தீவிர விசாரணை?
ஒரே இரவில் கோவில்களில் ஏழு கோவில்களில் உண்டியல்களை உடைத்து கொள்ளை.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் கீழ் இருக்கும் ஏழு வெவ்வேறு கோவில்களில் ஒரே நாளில் பணம், நகை திருட்டு போன்று சம்பவங்கள் அரங்கேறி இருக்கிறது. தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வரும் முக்கூடத்தி அம்மன் கோவில், தங்கம்மன் கோவில், வெள்ளி குளம் உச்சி மாகாளி அம்மன் கோவில், இசக்கியம்மன் கோவில், மடவார் வளாக பகுதிகளில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் திருக்கருப்பீஸ்வரர் கோவில், கடையத்தில் இருக்கும் ஓம் சக்தி கோவில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
மேலும் ஒரே இரவில் ஏழு வெவ்வேறு கோவில்களில் மர்ம நபர்கள் தங்களுடைய கைவசத்தை காட்டி இருக்கிறார்கள். இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் இந்த கோவில்களில் தொடர்ச்சியாக திருட்டு போயிருக்கும் சம்பவம் அந்த பகுதிகளில் இருக்கும் மக்களுடைய பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக ஏழு கோவில்களில் நேற்று முன்தினம் இரவும் மர்ம நபர்கள் புகுந்து பீரோக்களை உடைத்து அங்கு இருக்கும் நகை, பணங்களை கொள்ளையடித்து சென்று இருக்கிறார்கள். மேலும் இரண்டு கோவில்களில் பீரோக்களையும் உடைத்து அதில் இருக்கும் பணத்தை கொள்ளையடித்து சென்று இருக்கிறார்கள்.
காலையில் கோவிலுக்கு சென்று பக்தர்கள் உண்டியல் உடைத்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்து இருக்கிறார்கள். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்த தடையக்களை பதிவு செய்தார்கள். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள். பல்வேறு இடங்களில் ஒரே நாள் இரவில் நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
Input & Image courtesy: Maalaimalar