உலகின் வழிகாட்டியாக இந்தியா மாறும் - ஆளுநர் ஆர்.என்.ரவி

உலகின் வழிகாட்டியாக இந்தியா மாறும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருக்கிறார்.

Update: 2022-11-27 06:13 GMT

தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் 11 வது பட்டமளிப்பு விழா சென்னை தரமணியில் உள்ள அதன் வளாகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, தங்கப்பதக்கம் பெற்ற 34 மாணவ மாணவிகள் உட்பட 263 பெயருக்கு பட்டம் வழங்கி இருக்கிறார். அப்பொழுது அவர் சிறப்புரை ஆற்றுகையில், ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பம் என்பது ஒரு பரிணாம வளர்ச்சியாகும்.


மனித இனம் வளர்ச்சி அடையும் போதெல்லாம் இந்த துறையில் மாற்றம் கண்டு வருகிறது. காலத்தை விட இப்போது இந்தியா வளர்ச்சி நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. எதிர்வரும் 2047 இல் உலக நாடுகளின் வழிகாட்டியாக இந்தியா மாறும். அதற்கு மாணவ மாணவிகளின் பங்களிப்பு மிகவும் அவசியம். இந்தியா ஒருசார்பு நாடு என்று இலக்கை அடைய மாணவ மாணவிகளின் உந்துகோல் தேவையாக இருக்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் ஜவுளி துறையில் உலகில் இந்தியா முன்னணியில் இருந்தது.


ரோம் நாட்டிற்கு இந்தியாவில் இருந்துதான் ஆடைகள் சென்றன. ரோமின் பொருளாதாரத்தை முன்னேற்றுவது குறித்த அவர்களிடத்தில் ஆலோசனையில் ஒவ்வொரு ஆண்டும் 20 மில்லியன் தங்கம் ரூம் பெண்களின் ஆடைகளுக்கு செலவிடுவதை குறைக்க வேண்டும் என்று கூறினார்கள். அதாவது இந்திய உடைகள் வாங்குவதை புறக்கணிப்பதால் தான் பொருளாதாரத்தை காப்பாற்ற முடியும் என மற்ற நாட்டினர் என்னும் அளவிற்கு நமது வளர்ச்சி இருந்தது. அதை போல் இளைஞர்களுக்கு தெரியாத எதிர்காலத்தை நினைத்து பயப்படாமல், சவாலான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இளைஞர்கள் வளர்ந்தால் நாடு தானாக வளர்த்து விடும் என்று கூறினார்.

Input & Image courtesy: Dinamani

Tags:    

Similar News