இருளர் சமுதாயத்தினரிடம் கிறிஸ்தவ மதமாற்ற பிரச்சாரம்!

Update: 2022-01-05 12:02 GMT

செங்கல்பட்டு மாவட்டத்தில்,  இருளர் சமுதாயத்தினரிடம்  இந்து மதத்திற்கு எதிராக கிறிஸ்தவ மதமாற்ற கும்பல்  சட்டவிரோத மத மாற்ற பிரச்சாரத்தை மேற்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இந்தியாவில் நெடுங்காலமாக பட்டியலின மக்களை குறிவைத்து கிறிஸ்துவ மதப் பிரச்சார கும்பல் மதமாற்ற செயலை அரங்கேற்றி வருகிறது. பல தருணங்களில் பட்டியலின மக்களும் பழங்குடி இன  மக்களும் அம்முயற்சிகளை  முறியடித்து வந்துள்ளனர். இருந்தும் சட்டவிரோத மதமாற்றப் பிரச்சாரம் ஒய்ந்ததாக தெரியவில்லை. இன்றும் கூட இந்தியாவில் பல இடங்களில் பட்டியலின மக்களையும், பழங்குடியின மக்களையும் குறிவைத்து மதமாற்ற பிரச்சார கும்பல் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.


இந்நிலையில் தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே அன்னை சத்யா நகர் பகுதியில், இருளர் சமுதாய மக்கள் பெருமளவு வசித்து வருகின்றனர். அம்மக்களிடம்  இந்து மதத்திற்கு எதிராக மதமாற்ற பிரச்சாரத்தை கிறிஸ்தவ மதமாற்ற கும்பல் சட்டவிரோதமாக மேற்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சட்டவிரோத முயற்சி இந்து முன்னணியினர் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது.


இதுகுறித்து இந்து முன்னணியினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : செங்கல்பட்டு மாவட்டம் இரவு நேரத்தில் திருக்கழுக்குன்றம் அன்னை சத்யா நகர் பகுதியில் இருளர் சமுதாயத்தினர் வசித்து வருகிறார்கள். இந்துக்களுக்கு எதிராக கிறிஸ்துவர்கள் மதமாற்றம் பிரச்சாரம். இந்து முன்னணியினர் மூலம் தடுத்து நிறுத்தம். 

தமிழகத்தில் பல இடங்களில் சட்ட விரோத மத மாற்ற முயற்சிகளை இந்து முன்னணி அமைப்பு முறியடித்து  வருவது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News