கரூர் ஐ.டி. சோதனைக்கு களம் இறக்கப்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர்கள்: தலைத்தெறித்து ஓட்டம் பிடித்த தி.மு.க.வினர்!

கரூர் மாவட்டத்தில் நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வந்தனர்.

Update: 2023-05-28 01:47 GMT

கரூர் மாவட்டத்தில் நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வந்தனர். அப்போது அவர்களை பணி செய்ய விடாமல் தி.மு.க.வினர் அட்டூழியங்களில் ஈடுபட்டது மட்டுமின்றி அதிகாரிகளை தாக்கி காயப்படுத்தினர். இதன் காரணமாக சோதனை பாதியில் நிறுத்தப்பட்டு எஸ்.பி. அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.

இந்நிலையில், கரூர் காந்தி கிராமம் பகுதியில் அமைந்துள்ள பிரேம்குமார் வீட்டில் இரண்டாவது நாளாக இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்கின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பாக சி.ஆர்.பி.எப். வீரர்கள் 25க்கும் மேற்பட்டோர்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சி.ஆர்.பி.எப் வீரர்கள் 100 பேர் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி தாக்குதலுக்கு உள்ளாகி கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 4 அதிகாரிகளுக்கும் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். சோதனைக்கு சி.ஆர்.பி.எப் வீரர்கள் வருவதை கண்ட தி.மு.க.வினர் பல இடங்களில் தலைத்தெறித்து ஓடும் நிகழ்வுகள் நடைபெற்றது. நேற்று அதிகாரிகளை பணி செய்ய விடாமல் இடைஞ்சல் செய்தவர்கள் இன்று ஓட்டம் பிடித்திருப்பதை சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News