மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்திற்கு தமிழக மக்களிடம் குவியும் வரவேற்பு - மத்திய அமைச்சர் தகவல்

முழு வீச்சில் தமிழகத்தில் ஜல்ஜீவன் திட்டம் செயல்படுவதாக மத்திய அமைச்சர் தகவல்.

Update: 2022-11-06 08:23 GMT

ஜல் ஜீவன் திட்டம் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை இயக்குனர் கபில மோரேஸ்வர் தெரிவித்து இருக்கிறார். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஜானி உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட பின் அவர் செய்தியாளருக்கு பேட்டியின் போது கீழ்க்கண்டவாறு கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். மத்திய அரசின் அனைவருக்கும் குடிநீர் வழங்கும் திட்டமான ஜல்ஜீவன் திட்டம் முழுவீச்சில் தமிழகத்தில் செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.


மேலும் தமிழ்நாட்டில் 22,000 கிராமங்களில் இத்திட்டம் நடைபெற்று வருகிறது. குடிநீர் ஆதாரம் உள்ள கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. குடிநீர் ஆதாரம் இல்லாத கிராமங்களில் நீர் ஆதாரங்கள் ஏற்படுத்தப்பட்டு, பின் ஜல்ஜீவன் திட்டம் செயல்படுத்தப்படும். வளர்ந்து வரும் மாவட்டங்களாக பட்டியலிடப்பட்டுள்ள 112 மாவட்டங்களில் தமிழகத்தில் ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் இடம்பெற்றுள்ளன.


இதில் ராமநாதபுரம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. வேலை வாய்ப்பு கல்வி சுகாதாரம் மற்றும் அரசு நலத்திட்டங்களை செயல்படுத்துவது உள்ளிட்ட காரணிகள் அடிப்படையில் இந்த தரவரிசை நிர்ணயிக்க செய்யப்பட்டுள்ளது. நிதி அயோக் மூலம் இந்த மாவட்டங்களில் நிதி ஒதுக்கீடு பணிகள் வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட இருக்கிறது. ராமநாதபுர மாவட்ட வேளாண் துறைக்கு மத்திய அரசில் இருந்த ஆறு கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது மேலும் 4 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அவர் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: Maalaimalar News

Tags:    

Similar News