அரசு பள்ளியில் குழந்தைகள் சேருங்க.. வீட்டுவரியில் சலுகைகளை பெறுங்க..

அரசு பள்ளியில் சேரும் குழந்தைகளின் பெற்றோருக்கு வீட்டு வரியில் சலுகை.

Update: 2023-05-04 02:58 GMT

அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் பெற்றோர்களை ஊக்குவிக்கும் வகையில் ஊராட்சி மன்ற தலைவரின் பயணப்படி அமர்வுபடியில் இருந்து வீட்டு வரி செலுத்துவது என்ற கிராம சபை கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட வடபழஞ்சி ஊராட்சியின் கீழ் மே தினத்தை ஒட்டி தென்பலஞ்சு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவி வன்னி செல்வி தலைமை தாங்கி இருந்தார்.


2023-24 ஆம் ஆண்டிற்கான அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த தருணத்தில் கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அவசியம் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அரசு பள்ளிகளில் சேர்க்கக்கூடிய குழந்தைகளின் அனைத்து பெற்றோர்களுக்கும் வீட்டு வரியை செலுத்துவது என்று மக்களை ஈர்க்கும் வகையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.


குறிப்பாக அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் பெற்றோருக்கு வீட்டு வரியில் சலுகையும் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. மேலும் ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை மாணவர்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News