மழை நீர் வடிகால் பள்ளத்தில் உயிரிழந்த மற்றொரு நபர் - அரைகுறை பணிகளால் தொடரும் உயிரிழப்புகள்!

மழை நீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து உயிர் உள்ள மற்றொரு நபரினால் காஞ்சிபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

Update: 2022-11-11 04:07 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அருகே குடிநீர் வடிகால் பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டு இருக்கிறது. இந்த பள்ளத்தில் தவறுதலாக தவறி விழுந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் நபர் உயிரிழந்து இருக்கிறார். ஏற்கனவே சென்னையில் இதைப் போன்று பத்திரிகை துறையில் வேலை பார்க்கும் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு தமிழக அரசு குடிநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் முறையாக அறிவிப்பு பலகைகள் அல்லது தற்காலிகமாக குழிகளை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி இருந்தது.


இருந்தாலும் ஒரு சில இடங்களில் இன்னும் அரசு ஊழியர்கள் தரப்பில் இது பற்றி நடவடிக்கை எடுக்காமலேயே இருந்து வருகிறது. இந்நிலையில் இரண்டாவது முறையாக மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் ஒருவர் விழுந்து உயிரிழந்து இருக்கிறார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தின் டிரைவராக பணிபுரியும் இவர் இரவு வேலை முடித்து, அதிகாலை 5 மணி அளவில் வீடு திரும்பி கொண்டிருந்தார். மலையம்பாக்கம் சாலை வழியாக நடந்து கொண்டிருந்த டிரைவர் லட்சுமிபதி எதிர்பாராத விதமாக மூன்று அடி ஆழத்தில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து மூச்சு திணறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தலை குப்புற விழுந்த காரணத்தினால் மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.


காலையில் சாலையில் நடந்த நபர்கள் பார்த்த பொழுது தான் அவர் பள்ளத்தில் விழுந்து இருப்பது தெரியவந்தது. உரிய தடுப்புகள் எதுவும் அமைக்கப்படாததே இந்த விபத்திற்கு காரணம் என்று கூறுகிறார்கள் பொதுமக்கள். ஆனால் அவர் மது போதையில் இருந்ததாகவும் கூறப்பட்டு இருக்கிறது. அவருடைய உடல் கைப்பற்றப்பட்ட பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் முடிவில் தான் அவர் மது அருந்து இருக்கிறாரா என்பது தெரியவரும்.

Input & Image courtesy: Polimer news

Tags:    

Similar News