"மாணவியை மத மாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதாக தகவல் இல்லை" - தஞ்சை எஸ்.பியின் விளக்கத்தை எதிர்த்து, அண்ணாமலையின் அதிரடி கேள்விகள்!
"மாணவியை பள்ளி நிர்வாகம் மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதாக எந்த தகவலும் இல்லை" என்று தஞ்சை மாவட்ட எஸ்.பி ரவளி பிரியா அவர்கள் விளக்கமளித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த விளக்கத்திற்கு பதிலடியாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் கிடுக்குப்பிடி கேள்விகளை தஞ்சை மாவட்ட எஸ்.பி'க்கு எழுப்பியுள்ளார்.
தூய இருதய மேல்நிலைப்பள்ளி என்ற கிறிஸ்தவ பள்ளியில், படித்த பன்னிரெண்டாம் வகுப்பு பள்ளி மாணவியை அப்பள்ளி நிர்வாகம் மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியத்தை தொடர்ந்து, அம்மாணவி மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் நேற்று பூதாகரமாக வெடித்தது.
மாணவியின் இறுதி வாக்குமூலமாக வீடியோ ஒன்றில் அம்மாணவி கூறும் வார்த்தைகள் அனைவரையும் பதைபதைக்க வைத்தது. அந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி தேசிய அளவில் பேசுபொருளாகியது.
இந்த விவகாரத்தை குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு தேசிய ஆணையம் கையில் எடுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து அவ் ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனூங்கோ தமிழக டி.ஜி.பி'யை "உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு" நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் நேற்று சட்டவிரோதமாக மாணவர்களை கட்டாயப்படுத்தி மதமாற்ற செயல்களை அரங்கேற்றிய கிறிஸ்துவப் பள்ளியியின் கொடுமையை மூடிமறைக்கும் வகையில், தஞ்சை மாவட்ட எஸ்.பி ரவளி பிரியா விளக்கம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது " தஞ்சையில் பள்ளி மாணவியை மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதாக எந்த தகவலும் இல்லை" என்று ஊடக சந்திப்பில் கூறியுள்ளார்.
"தமிழக கல்வி நிலையங்களில், இந்து மாணவர்களை குறிவைத்து கிறிஸ்தவ பள்ளிகளும் மற்றும் கல்லூரிகளும் கட்டாய மத மாற்றத்திற்கு மாணவர்களை வற்புறுத்துகிறார்கள்" என்று பல அமைப்புகள் குற்றச்சாட்டு எழுப்பி வரும் நிலையில், தற்போது பள்ளி மாணவி இறப்பின் மூலம் அக்குற்றச்சாட்டுகள் உண்மையாக்கப்பட்டுள்ளது. ஆனால் தி.மு.க அரசின் தமிழக காவல்துறை கிறிஸ்துவ பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்குமா?? என்பதே பலரது கேள்வியாகவுள்ளது.