தமிழகத்தில் பொதுமுடக்கம் இல்லை.. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி.!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது மீண்டும் படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில், பிரதமர் மோடி இன்று மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

Update: 2021-03-17 12:28 GMT

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது மீண்டும் படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில், பிரதமர் மோடி இன்று மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது கொரோனா தொற்று அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும், தொற்றை கண்டறிய சோதனைகளை அதிகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் ஊரடங்கு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் பேசும்போது: "அதை அறிவிக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். ஆனால், அனைவரும் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்.

தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். எனவே இதில் யாரும் அலட்சியம் காட்டக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News