சித்திரை திருவிழாவின் போது மது கடைகளை திறப்பதா... நீதிமன்றம் கூறியது என்ன...

சித்திரை திருவிழாவின் போது நடக்கும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மது கடைகளை மூடிக்கோரிய வழக்கு.

Update: 2023-04-30 00:45 GMT

மதுரை மாவட்ட பா.ஜ.க தலைவர் மகா சுசீந்திரம் அவர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருக்கிறார். குறிப்பாக அந்த மனுவில் அவர் கூறுகையில், மதுரை சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை திருவிழா என்பது பல நாட்கள் கொண்டாட்டமாக இருக்கிறது. குறிப்பாக மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், தேரோட்டம், வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருள் போன்ற பல்வேறு தொடர்ச்சியான விழாக்கள் கோலாகலமாக பல நாட்கள் நடைபெறும்.


இந்த விழாக்களில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்வார்கள். சித்திரை திருவிழாவின் போது முக்கிய நிகழ்ச்சி ஆன மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், தேரோட்டம் மற்றும் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளுதல் போன்ற நிகழ்ச்சியின் போது திருவிழாக்களில் வருகின்ற 30ஆம் தேதி முதல் மே 6ஆம் தேதி வரை தம் மதுரையில் உள்ள டாஸ்மார்க் கடைகள், தனியார் மதுபான விற்பனை நிலையங்களை மூட வேண்டும் என்று கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.


ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அவற்றை மூட உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், கலெக்டர் இது பற்றி உடனடியாக முடிவு எடுக்கப்பட வேண்டும். மதுரை மாவட்ட கலெக்டர் பரிசீலித்து தேவைப்படும் பட்சத்தில் டாஸ்மார்க் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிபதி கருத்து தெரிவித்து இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News