வியாபாரிகள், பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் கடும் நடவடிக்கை ! - மதுரை மாநகராட்சி!
மதுரை மாநகரில் உள்ள வியாபாரிகள் மற்றும் தொழில் நிறுவன பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போடத் தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை மாநகரில் உள்ள வியாபாரிகள் மற்றும் தொழில் நிறுவன பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போடத் தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி தடுப்பூசி போடும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மக்கள் தடுப்பூசி போடுவதற்கு இன்னும் தயங்கி கொண்டிருப்பதை காணமுடிகிறது.
அந்த வகையில் மதுரை மருத்துவக் கல்லூரியில் தடுப்பூசி முகாம் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக ஆணையர் கார்த்திகேயன் கூறியுள்ளார்.
Source, Image Courtesy: Puthiyathalamurai
https://www.puthiyathalaimurai.com/newsview/114649/Corporation-Commissioner-Karthikeyan-has-warned-that-action-will-be-taken-if-traders-and-industrialists-in-Madurai-fail-to-get-the-corona-vaccine