கோவில் நிலத்தை கையகப்படுத்தி வாகன காப்பகம் கட்டுவதா? நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?
கோவில் நிலத்தை கையகப்படுத்தி வாகன காப்பத்திற்கு அனுமதி அளித்ததா நீதிமன்றம்?
தென் மாவட்ட மக்கள் நலன் கருதி மதுரை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தொடங்கப்பட்டது. குறிப்பாக திருச்சி, கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான மக்கள் தங்களுடைய கோரிக்கைகளுக்காக தினமும் மதுரை உயர்நீதிமன்றத்தில் நாள்தோறும் வந்து செல்கிறார்கள். இவர்களை தவிர பல்வேறு துறைகள் மற்றும் அலுவலர்கள் வழக்கு சம்பந்தமாகவும் இங்கு வந்து செல்கிறார்கள். இந்த ஒரு உயர் நீதிமன்றத்தில் தற்பொழுது மதுரையை சேர்ந்த சரவணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தான் தற்போது விசாரணைக்கு வந்து இருக்கிறது.
குறிப்பாக வாகன காப்பகத்தை தாண்டி ஏராளமான வாகனங்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் நிறுத்தி வைப்பதாகவும் இதனால் அங்கு அதிகமான வாகன நெரிசல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இதற்காக நீதிமன்றத்தின் எதிரில் உள்ள கோதண்டராமசாமி கோயிலுக்கு சொந்தமான 9.49 ஏக்கர் நிலம் காலின் நிலத்தை கையகப்படுத்தி வாகனம் நிறுத்தும் இடம் ஏற்படுத்தி தர உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டு இருக்கிறது. இந்த மனுவை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்து இருக்கிறது.
சம்பந்தப்பட்ட அறநிலையத்துறை கமிஷனருக்கு கடிதம் எழுதப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான நடவடிக்கை பரிசீலகில் இருப்பதாகவும் நிலத்தின் வழிகாட்டு மதிப்பீட்டை நிர்ணயம் செய்து தொடர்பாக வருவாய்த்துறையினர் விவரம் கேட்டிருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார். இந்த விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசு தரப்பிற்கு உத்தரவிட்ட விசாரணையை மாற்றி 30 ஆம் தேதிக்கு ஒத்து வைத்து இருக்கிறார்கள்.
Input & Image courtesy: Dinamalar