மதுரையில் 23 மருத்துவ கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - சிக்கிய சையது தாகிர் உசேன்!
மதுரை அரசு மருத்துவமனையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மயக்கவியல் உதவி பேராசிரியர் சையது தாகிர் உசேன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக 23 மாணவிகள் பரபரப்பான புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அரசு மருத்துவமனையில் மயக்கவியல் துறை மற்றும் பி.எஸ்.சி., ஆப்பரேஷன் தியேட்டர் படித்து வரும் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக மதுரை அரசு மருத்துவமனை மயக்கவியல் துறை உதவி பேராசிரியர் சையது தாகிர் உசேனை மருத்துவ கல்வி இயக்குனரால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவிகள், உதவி பேராசிரியர் மீது கடந்த மே 6 ம் தேதி புகார் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து விசாகா கமிட்டி மாணவிகளிடம் விசாரணை நடத்தியதில், உண்மை என தெரியவந்துள்ளது. இதன் பின்னர் விசாகா கமிட்டியினர் அளித்த எழுத்துப்பூர்வமான அறிக்கையை மருத்துவ கல்வி இயக்குநருக்கு அனுப்பப்பட்ட நிலையில் பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Dinamalar