மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்... வெகு விமர்சியாக தயாராகும் தூங்கா நகரம்!
மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை ஒட்டி மதுரை மாநகர் எங்கும் வெகு விமர்சையாக அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது.
மதுரை சித்திரை திருவிழா என்பது உலகப் பிரசித்தி பெற்றதும் குறிப்பாக தமிழகத்தில் இருக்கும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் முதல் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல் நிகழ்ச்சி வரை கலந்துகொண்டு கடவுளை தரிசனம் செய்வார்கள். இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் இன்று நடைபெற இருக்கிறது. திருக்கல்யாணத்திற்கு மறுநாள் தேரோட்டம் நடைபெற இருக்கிறது.
இதனை காண்பதற்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள், மேலும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் அதிக அளவில் வருகை தர இருக்கிறார்கள். நடைபெறும் வெகு விமர்சியாக திருவிழா என்பதால் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நகரில் பொதுமக்களுக்கு போக்குவரத்துக்கு இடையூறாக இன்றி இயல்பான போக்குவரத்து நடைபெறும் பகுதியில் மீனாட்சியம்மன் கோபுரத்தை சுற்றியுள்ள நான்கு ஆவணி மாசி மற்றும் வெளிப்புற வீதிகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
குறிப்பாக இது தொடர்பாக போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் சார்பில் செய்தியும் வெளியிடப்பட்டு இருக்கிறது. மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை ஒட்டி இரவு 11 மணி அளவில் இருந்து வாகனங்கள் அந்த பக்கத்தில் செல்வதற்கோ, நிறுத்துவதற்கோ அனுமதி கிடையாது. குறிப்பாக ஆவணி மூல வீதிகளில் வாகனங்கள் செல்வதற்கு முற்றிலும் தடை செய்யப்பட்டு இருக்கிறது. திருக்கல்யாணத்தன்று அனுமதி அட்டை இல்லாத இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு வடக்கு மாசி வீதியில் மற்றொரு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
Input & Image courtesy: News