37 ஆண்டுக்கு பின் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உலக பிரசித்தி பெற்றது ஆகும். இந்த கோயிலுக்கு உலகம் முழுவதிலும் இருந்த பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் இருக்கிறது.

Update: 2021-11-30 11:47 GMT

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உலக பிரசித்தி பெற்றது ஆகும். இந்த கோயிலுக்கு உலகம் முழுவதிலும் இருந்த பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் இருக்கிறது.

இது போன்று கோயிலுக்கு சொந்தமான நிலத்தை பலர் குத்தகைக்கு எடுத்துவிட்டு அதனை மீண்டும் அறநிலையத்துறைக்கு ஒப்படைக்காமல் பலர் ஆக்கிரமித்தும், சட்டவிரோதமாக பட்டா போட்டு வருகின்றனர். அது போன்ற நிலங்களை மீட்பதற்காக நீதிமன்றங்களில் பல வழக்குகளும் போடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்புள்ள இடம் நீதிமன்ற உத்தரவுப்படி 37 ஆண்டுகளுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளது.


மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் காலியிடம், மதுரை பொன்னேரியில் உள்ளது. இந்த இடத்தை சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் மாடுகளை மேய்த்துக்கொண்டு, அங்கேயே கட்டியும் அந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். காலம் செல்ல செல்ல தங்களுக்கு சொந்தம் என உரிமையும் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். இந்த நிலத்தை மீட்க வேண்டும் என்று கடந்த 1948ம் ஆண்டு மதுரை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டுள்ளது. தற்போது நீதிமன்றம் கோயிலுக்கு சாதகமான தீர்ப்பையும் தந்துள்ளது. பக்தர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

அதன்படி நேற்று (நவம்பர் 29) கோயில் இணை கமிஷனர் செல்லதுரை தலைமையிலான அதிகாரிகள் ஆக்கிரமிப்பு இடத்தினை மீட்டுள்ளனர். அங்கு சட்டவிரோதமாக கட்டப்பட்ட கடைகளையும் ஜேசிபி இயந்திர உதவியுடன் அகற்றினர். இந்த இடத்தின் தற்போதைய மதிப்பு ரூ.10 கோடி போகும் எனவும் கூறினார்.

அதே போன்று இந்து அறநிலையத்துறை உத்தரவுப்படி தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே சிலத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது காசி விஸ்வநாதர் கோயில். இக்கோயிலுக்கு சொந்தமாக 700 ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு சாகுபடிதாரர்கள் யார் என கண்டறியப்பட்டு அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தினை பொது ஏலம் விடப்பட்டதில் ரூ.25 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Dinamalar


Tags:    

Similar News