கைவினைப் பொருட்கள் கடையில் இருந்து பழங்கால சிலைகள் மீட்பு - போலீசார் அதிரடி!
மதுரையில் கைவினைப் பொருட்கள் கடையில் இருந்து மூன்று பழங்கால சிலைகள் மீட்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சில கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் சோதனைகளை மேற்கொண்டு பல்வேறு அரிய கோவில் சிலைகள் மற்றும் பொக்கிஷமாக இருக்கும் மன்னர்களின் சிலைகளை சட்டத்திற்கு புறம்பாக கடத்தி வைத்து இருப்பவர்களிடம் குறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். அந்த வகையில் தற்பொழுது மதுரை வடக்கு சித்திரை வீதியில் உள்ள கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் மூன்று பழங்கால சிலைகள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ரகசிய தகவலின் பெயரில் இந்த ஒரு சம்பவம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசருக்கு கிடைத்துள்ளது.
விசாரணையின் பெயரில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சூப்பரண்டு பாலமுருகன் மற்றும் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் தனிப்படை போலீசார் குறிப்பிட்ட கடையில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையின் போது அந்த குறிப்பிட்ட கடையில் பதிக்க வைத்திருந்த மூன்று பழங்கால கற்கால சிலை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. கடை மேலாளரிடம் இது குறித்து விசாரித்த போதும் இந்த சிலைகளுக்கான ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது.
இதனால் அந்த சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. விசாரணையில் அந்த சிலைகளின் அமைப்பு வைத்து பார்க்கும் பொழுது அவை ஒடிசா அல்லது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஏதாவது ஒரு கோவிலில் திருடி கடத்தி வரப்பட்டுள்ளதாக இருக்கலாம் என்று தெரியவந்தது. இந்த சிலைகள் குறிப்பிட கடைக்கு எப்படி வந்தது என்பது குறித்து தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் செய்தியாளர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.
Input & Image courtesy: Dinakaran news