மதுரை முனியாண்டி கோயில் திருவிழா: 50 கிராமங்களுக்கு சுடச் சுட பிரியாணி விருந்து!
மதுரை மாவட்டம், வடக்கம்பட்டியில் இருக்கின்ற முனியாண்டி கோயில் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் சுடச் சுட பிரியாணி விருந்து அளிக்கப்பட்டுள்ளது. மதுரை, கள்ளிக்குடி அருகே உள்ள வடக்கம்பட்டி என்ற கிராமம். இந்த கிராமம்தான் முனியாண்டி விலாஸ் ஓட்டலின் தாய் வீடாகவும் கருதப்படுகிறது. அதன்படி முனீஸ்வரருக்கு ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் வெள்ளிக்கிழமை திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதே போன்று இந்த வருடம் வெள்ளிக்கிழமை பூஜையிட்டு இரவு முழுவதும் கிடா வெட்டு நடைபெற்றது. மொத்தம் 200க்கும் மேற்பட்ட ஆடுகளும், 300க்கும் அதிகமான கோழிகளும் வெட்டி சமைக்கப்பட்டது.
மொத்தம் 50 பிரமாண்ட பாத்திரங்களில் சுமார் இரண்டரை டன் அரிசி வைத்து பிரியாணி செய்யப்பட்டு, 50 கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு சுடச் சுட பிரியாணி பரிமாறப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Puthiyathalaimurai