மதுரை அருகே உலகப் புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்று வருகிறது. மாட்டுப் பொங்கல் தினமான இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியுள்ளது.
இந்த போட்டியில் சுமார் 700 காளைகள் மற்றும் 300 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு சுற்றுக்கும் மாடுபிடி வீரர்கள் பல்வேறு நிற சீருடைகளை அணிந்து வருவார்கள். இந்த போட்டியில் மதுரை, திருச்சி, கோவை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் கலந்து கொள்கின்றது. போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு, வெற்றிச்சான்றிதழ் மற்றும் கார் முதல் கட்டில் மெத்தை வரை பரிசாக வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: Dinamalar
Image Courtesy: Times Now