வாணியம்பாடி சாராய வியாபாரி மகேஸ்வரி வழக்கு: 30 போலீசார் அதிரடி மாற்றம்!

Update: 2022-04-13 13:31 GMT

மகேஸ்வரியின் சாராய வியாபாரத்தை தடுக்காத வாணியம்பாடி தாலுகா காவல் நிலையப் போலீசார் சுமார் 30 பேர் கூட்டோடு இடமாற்றம் செய்திருப்பது போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் சுமார் பல ஆண்டுகளாக சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த மகேஸ்வரி பற்றி பிரபல வார இதழில் கட்டுரை வெளியானது. இதன் பின்னர் வேலூர் சரக டிஜஜி ஆனி விஜயா உத்தரவின்பேரில் மகேஸ்வரியை கைது செய்ய உத்தரவிட்டார். இதனை அறிந்த மகேஸ்வரி திருவண்ணாமலைக்கு சென்று உறவினர் வீட்டில் தஞ்சம் புகுந்தார்.

இதன் பின்னர் கடந்த ஏப்ரல் 9ம் தேதி நள்ளிரவில் போலீசார் சுற்றி வளைத்து மகேஸ்வரியை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். அவருக்கு உதவியவர்களும் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில் மகேஸ்வரியின் சாராய வியாபாரத்தை தடுக்காத வாணியம்பாடி தாலுகா காவல்நிலைய போலீசார் 30 பேரை கூண்டோடு இடமாற்றம் செய்வதற்கு டிஜிஜி உத்தரவிட்டுள்ளார். ஒரே காவல் நிலையத்தில் 30 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது திருப்பத்தூர் மாவட்ட போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Vikatan

Tags:    

Similar News