மணலூர் ஆற்றில் அம்மன் சிலை கண்டெடுப்பு: ஐம்பொன் சிலையா?

கோவில் திருவிழாவின் பொழுது மணலூர்பேட்டை ஆற்றில் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டு இருக்கிறது.

Update: 2023-01-18 07:00 GMT

திருக்கோவில் நல்லூர் அடுத்து மணலூர்பேட்டை தென்பொன்னை ஆற்றில் பந்தல் அமைக்க பள்ளம் தோன்றிய பொழுது ஒன்றரை அடி உயரமுள்ள அம்மன் சிலை தற்போது கண்டெடுக்கப் பட்டிருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோயிலில் ஊர் அடுத்து மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆறு நடைபெறுகிறது. இங்கு பொங்கல் திருவிழா மிகவும் விமர்சியாக நடைபெறும்.


ஆற்றில் பொங்கல் பண்டிகையின் ஐந்தாம் நாள் திருவிழாவில் அம்மன் மற்றும் அண்ணாமலையார் பங்கேற்று ஆட்சி திருவிழா நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது. விழா ஜனவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக நேற்று தென்பெண்ணை ஆற்றில் திருமலை அண்ணாமலையார் எழுந்தருள பந்தல் அமைக்கப்பட பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. அப்பொழுது அந்த பள்ளத்தில் ஒன்றை அடி உயரமுள்ள உலோகத்தால் ஆன அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. சுவாமியின் பீடத்தில் அமிர்த நிலையில் அம்மன் லட்சுமி சிலையாக இது கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.


சிலையை சுத்தம் செய்து தற்போது விநாயகர் கோயில் வைத்து வருவாய்த்துறையில் இருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. வருவாய்த்துறையினர் அந்த சிலையை தற்பொழுது மீட்டு இருக்கிறார்கள். இந்த சிலை எந்த காலத்தை சேர்ந்தது? ஐம்பொன் சிலையா என்று குறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று தகவல்கள் கூறப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy:Dinamalar

Tags:    

Similar News