கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசி கொடி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று (பிப்ரவரி 27) துவங்கியது. இந்த விழாவில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தார்.
கன்னியாகுமரியில் அமைந்திருக்கும் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவர். இதில் பெண்கள் தலையில் இருமுடி கட்டிக்கொண்டு பொங்கலிட்டு அம்மனை தரிசித்து செல்வர். இது பெண்களின் சபரிமலை எனவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், மாசி மாதம் திருவிழாவை முன்னிட்டு மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. கொடியை கோயில் தந்தரி மகாதேவர் ஐயர் ஏற்றி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Puthiyathalaimurai