மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: அகல் விளக்கேற்றும் கட்டணத்தை உயர்த்திய தி.மு.க. அரசுக்கு எதிரப்பு!
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அங்கு வருபவர்கள் சாமிக்கு நேர்த்திக்கடனாக நெய் விளக்கு, எண்ணெய் விளக்கு, எள் விளக்கு உள்ளிட்டவைகளை வாங்கி ஏற்றி வழிப்படுவர். அதன் விலை 5 ரூபாய் என இருந்தது. இதனால் சராசரியாக ஆண்டுக்கு 2 முதல் 3 லட்சம் விளக்குகள் விற்பனையானது.
இதனிடையே அனைத்து விளக்குகளின் விலையை உயர்த்துவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த விலையேற்றத்துக்கு இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்டவைகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளது. உடனடியாக உயர்த்தப்பட்ட விலையை மாற்றி பழைய விலைகளுக்கே விளக்குகளை விற்பனை செய்ய வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source, Image Courtesy: Maalaimalar