கேரளாவில் உள்ள பாதிரியாருக்கு மணல் கடத்துவதற்கு உறுதுணையாக இருந்த கனிம வளத்துறை உதவி இயக்குனர் சபியா மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள கனிம வளங்களை பாதுகாப்பதற்காக அதற்கான துறை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் கனிம வளங்களை பாதுகாப்பதற்கு பதிலாக கடத்தல் காரர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு கண்டும் காணாமல் இருந்து விடுகின்றனர்.
அதே போன்று கேரளாவுக்கு மணல் கடத்துவதற்கு உதவி செய்த கனிம வளத்துறை உதவி இயக்குனர் சபியா மருத்துவ சிகிச்சை முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு வருகின்ற ஏப்ரல் 22ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைப்பதற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Dinamalar