பயங்கரவாத அமைப்புடன் சென்னையில் 18 பேர் தொடர்பு - பகீர் கிளப்பும் உள்துறை அமைச்சக பட்டியல்

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி சென்னையில் நான்கு பேரின் வீடுகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

Update: 2022-11-20 12:50 GMT

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி சென்னையில் நான்கு பேரின் வீடுகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

உள்துறை அமைச்சகம் அளித்த பட்டியலில் சென்னையில் 18 பேர் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக தெரியவந்துள்ளது, அதன் அடிப்படையில் ஏற்கனவே இரண்டு முறை 8 இடங்களில் சோதனை நடத்திய போலீசார் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர்.

இந்நிலையில் சென்னையில் மூன்றாவது முறையாக ஓட்டேரி, வேப்பேரி, ஏழு கிணறு பகுதிகளில் நாலு பேரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். இதுபோல் திருச்சியில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையதாக இரண்டு பேரின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர். இப்படி தொடர்ச்சியாக சோதனை செய்வது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


Source - Polimer News

Similar News