பொதுக்குழுவில் முதல்வர் ஸ்டாலின் புலம்பிய பின்னணி!

தி.மு.கவினரால் இனி எந்த பிரச்சனையும் வரவிடக்கூடாது என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கட்சி நிர்வாகத்திற்கு அட்வைஸ்.

Update: 2022-10-10 02:26 GMT

தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் இரண்டாவது முறையாக தி.மு.கவின் தலைவராக மு.க.ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த பொதுக்கூட்டத்தின் போது தி.மு.கவைச் சேர்ந்த மூத்த கட்சித் தலைவர்களையும் தற்போது வறுத்து எடுத்து இருக்கிறார். இதனைக் கண்டு சமீபத்தில் பல்வேறு பிரச்சினைகளை சிக்கிய திமுக அமைச்சர்களின் முகத்தில் ஈ ஆடவில்லை. காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தி.மு.க கட்சியின் தலைவராக அவர்களுக்கு அறிவுரை கூறியது தான்.


மேலும் மு.க.ஸ்டாலின் அவர்கள் இப்படி பேசியதற்கு காரணம் உளவுத்துறையின் பின்னணி தகவல்தான் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஏனெனில் இப்படியே தி.மு.க கட்சியினர் இப்படியே செய்து கொண்டே இருந்தால் பின்விளைவுகள் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது பற்றி அவர் மேடையில் பேசுகையில், ஒரு பக்கம் முதல்வர். மறுபக்கம் தி.மு.க தலைவர் என இரண்டு பக்கங்களிலும் நான் செயலாற்று வேண்டி உள்ளது. மத்தாலத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல என் நிலைமை தற்பொழுது உள்ளது. மூத்த அமைச்சர்களும், நிர்வாகிகளும் இது போன்ற பல்வேறு சிக்கல்களில் சிக்கிக் கொண்டால், நான் என்ன செய்வது? என் நிலைமை என்ன? காலையில் தினமும் கண் விழிக்கும் பொழுது, தி.மு.கவினர் எந்த பிரச்சினை செய்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் தான் இருக்கிறேன்.


சில நேரங்களில் என்னை தூங்க விடாமல் செய்த பிரச்சனைகளும் இருக்கின்றன. பொது இடங்களில் சிலர் செய்த தவறுகள் காரணமாக திமுக கழகத்திற்கு பழிகளும் வந்து சேர்கின்றது. ஒவ்வொரு நொடியும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். அனைவரின் நன்மைக்காகத் தான் இதைக் கூறுகிறேன். பேசும் பொழுது மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற கூறுகிறார்.

Input & Image courtesy: Update News

Tags:    

Similar News