கொள்ளை அடிப்பது மட்டும் தான் குடும்ப கட்சிகளின் நோக்கம் - ஃபுல் ஃபார்மில் தமிழகம் வரும் மோடி

கொள்ளையடிப்பது மட்டும் தான் குடும்ப கட்சிகள் நோக்கம் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2022-05-26 10:12 GMT
கொள்ளை அடிப்பது மட்டும் தான் குடும்ப கட்சிகளின் நோக்கம் - ஃபுல் ஃபார்மில் தமிழகம் வரும் மோடி

தமிழ்நாட்டில் வருகை தருவதற்கு முன் தெலுங்கானாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உரையாற்றுகையில் குடும்ப கட்சிகள் கொள்ளையடிப்பது தான் அவர்களின் முக்கிய நோக்கமாக உள்ளது என்று குற்றம்சாட்டி உள்ளார். இன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்திற்கு வருகை தந்து, 31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களுக்கு சென்னை ஜேஎல்என் உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி வியாழக்கிழமை மாலை அடிக்கல் நாட்டுகிறார். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-நகர்ப்புற திட்டத்தின் கீழ் 116 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 'லைட் ஹவுஸ் திட்டம் - சென்னை' திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்ட 1,152 வீடுகளையும் பிரதமர் திறந்து வைக்கிறார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


எனவே இந்த நிகழ்ச்சியில் வருகை தருவதற்கு முன்பு தெலுங்கானாவில் உரையாற்றுகையில், குடும்ப கட்சிகள் சுயநலனை மட்டுமே விரும்புகின்றன. ஏழை மக்களின் வாழ்வுக்காக அவர்கள் எதையும் செய்வதில்லை. அவர்களின் முக்கியமான குறிக்கோளாக ஒரே குடும்பம் எப்படி அதிகாரத்தை செலுத்துவதும்? மக்கள் சொத்தை எப்படி கொள்ளையடிப்பது? என்பதை பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள் என்று கூறியுள்ளார். குடும்ப கட்சிகள் ஜனநாயகத்திற்கு மட்டுமல்லாமல் இளைஞர்களின் தீங்கானவை என்று அவர் கூறினார்.


எனவே ஒரே கட்சி தலைவர் தலைமுறை தலைமுறையாக ஆட்சி செய்வது என்பது ஊழலில் உறைவிடமாக இருக்கிறது. எனவே தெலுங்கானா மக்கள் மாற்றத்தை விரும்பும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் அவர்கள் குடும்ப கட்சி ஆட்சி செய்வதற்கு தமது ஆதரவை அளிக்க மாட்டார்கள் என்று பிரதமர் மோடி அவர்கள் குறிப்பிட்டார்.

Input & Image courtesy: Junior Vikatan News

Tags:    

Similar News