சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக முனீஸ்வரர்நாத் பண்டாரி இன்று பதவியேற்கிறார்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்திருந்த சஞ்சீவ் பானர்ஜி, மேகாலயா மாநில உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எம்.துரைசாமி பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

Update: 2021-11-22 03:35 GMT

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்திருந்த சஞ்சீவ் பானர்ஜி, மேகாலயா மாநில உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எம்.துரைசாமி பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி இன்று (நவம்பர் 22) சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி ஏற்கிறார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News