நீட் தேர்வில் தமிழக பாடத்திட்டத்தில் தேர்வு எழுதியவர்கள் அதிகளவு தேர்ச்சி: தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் முகத்தில் கரியை பூசிய மாணவர்கள்!
நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் தேர்வு எழுதியவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் தேர்வு எழுதியவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பயின்று அதிலேயே நீட் தேர்வு எழுதியவரகள் மொத்தம் 88,993 பேர். இதில் 42,202 பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் பல மாணவர்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. நீட் நுழைவுத்தேர்வு தேர்ச்சி பட்டியலில் முதல் 10,000 இடங்களில் 175 பேர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 1,08,318 பேரில் மொத்தம் 58,922 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மட்டும் 42,202 பேர் தமிழ் வழியில் தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்தவர்கள் என்பதால், நீட் தேர்வு எழுதியவர்கள் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் அதிகளவு தேர்ச்சி அடைந்துள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த செப்டம்பர் 12ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வை நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் முடிவுகள் மாணவர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவுகளை வைத்து பார்த்தால் இனிமேல் திமுக, காங்கிரஸ், மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகள் அரசியல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக பாடத்திட்டத்தில் படித்தவர்களே இவ்வளவு பேர் தேர்ச்சி அடைந்துள்ளதால் வரும் ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது. இதனால் திமுக உள்ளிட்ட கட்சிகளின் முகத்தில் மாணவர்கள் கரியை பூசி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Puthiyathalamurai
Image Courtesy:Conceptree Learning