நீட் தேர்வு: பெரும்பாலான கேள்விகள் மாநில அரசின் பாடத்திட்டத்தில் கேட்கப்பட்டுள்ளது! பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

நீட் தேர்வு வினாத்தாளில் பெரும்பாலான கேள்விகள் மாநில அரசின் பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வில் தமிழகத்தில் இருந்து 1.10 லட்சம் மாணவர்கள் பங்கேற்று எழுதியுள்ளனர்.

Update: 2021-09-13 13:18 GMT

இந்நிலையில், நடந்து முடிந்த நீட் தேர்வு வினாத்தாளில் பெரும்பாலான கேள்விகள் மாநில அரசின் பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இயற்பியல், விலங்கியல் பாட வினாக்களில் 95 சதவீத கேள்விகள் தமிழ்நாடு அரசின் பாடப்புத்தகங்களில் இருந்து கேட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி தாவரவியல், வேதியியல் பாடங்களில் இருந்து 75 சதவீத வினாக்கள் மாநில அரசின் பாடப்புத்தகங்களில் இருந்து கேட்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. இதில் 76 வினாக்கள் மிகவும் எளிமையாக கேட்கப்பட்டுள்ளதாகவும், 62 வினாக்கள் சராசரியாக இருந்ததாகவும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.

Source: News 7 Tamil

Image Courtesy:Dna India

Tags:    

Similar News