நெல்லையில் ஆண் யானை மர்மமான முறையில் உயிரிழப்பு: விசாரணையை தீவிரப்படுத்திய வனத்துறை !
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 14 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பற்றி வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 14 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பற்றி வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டம், பணகுடி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பூதப்பாண்டி வனத்தில், வனத்துறையினர் வழக்கமான முறையில் ரோந்து சென்றுள்ளனர். அப்போது கஞ்சிப்பாறை மலைப்பகுதியில் ஆண் யானை ஒன்று உயிரிழந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு கால்நடை மருத்துவர்கள் மற்றும் அழைத்து சென்று பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். இதன் பின்னர் அதே இடத்தில் உடலை அடக்கம் செய்தனர். ஆண் யானை உயிரிழந்திருப்பது பற்றி வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source, Image Courtesy: Puthiyathalamurai