3 மாணவர்களின் உயிரை பறித்த கிறிஸ்தவ பள்ளி திறப்புக்கு இந்து முன்னணி கடும் எதிர்ப்பு!
நெல்லை நகரத்தில் அமைந்திருக்கும் சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17ம் தேதி கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் மீண்டும் 81 நாட்களுக்கு பின்னர் பள்ளி திறக்கப்பட்டதற்கு இந்து முன்னணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மூன்று மாணவர்களை உயிர் பலி வாங்கிய சாப்டர் மேல்நிலை பள்ளியை
— Hindu Munnani (@hindumunnaniorg) March 9, 2022
அவசரகதியில் மீண்டும் திறக்க முயற்சிக்கும் மாவட்ட கல்வித் துறையை கண்டித்து இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம்#இந்துமுன்னணி #சாப்டர் #SCHOOL #EDUCATION pic.twitter.com/eonaXusnGk
பள்ளியில் கட்டிடங்கள் சரிவர இல்லை எனவும், இப்பள்ளியை உடனடியாக மூடவேண்டும் எனவும் இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டது. இதனால் கடந்த 81 நாட்களாக பூட்டப்பட்டிருந்த பள்ளி இன்று (மார்ச் 9) மீண்டும் திறக்கப்பட்டது.
இந்நிலையில், மாணவர்களின் உயிரை பறித்த பள்ளியை எப்படி மீண்டும் திறக்கலாம் என இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. பள்ளியில் எதுவும் சரியில்லை எனவே பள்ளிக்கல்வித்துறையையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உடனடியாக பள்ளியை மூடவேண்டும் என்ற கோரிக்கையை அரசுக்கு முன்வைத்தனர்.
Source, Image Courtesy: Twiter